தமிழகம் முழுவதும் வக்கீல்கள் 6ம் தேதி கோர்ட் புறக்கணிப்பு
சென்னை: தமிழகம் முழுவதும் வக்கீல்கள் மீது நடந்து வரும் தாக்குதல்களைக் கண்டித்து வருகிற 6ம் தேதி தமிழக வக்கீல்கள் ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தவுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் பரமசிவம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சமீப காலமாக தமிழ்நாட்டில் வக்கீல்களை போலீசார் தாக்குவதும், அவர்கள் மீது பொய் வழக்கு போடுவதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வக்கீல்களிடம் வஞ்சம் தீர்க்கும் வகையில் போலீசார் நடந்துகொள்வதாக நாங்கள் கருதுகிறோம்.
உதாரணமாக சேலத்தில் வக்கீல்கள் அய்யப்பமணி, ரவிசங்கர், ராஜா ஆகியோர் மீதும், நாமக்கல் நகரில் வக்கீல் அன்பரசு, திருச்செங்கோட்டில் வக்கீல் எம்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் மீதும் போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளனர்.
தர்மபுரியில் வக்கீல்கள் கோவிந்தராஜன், ரவி மற்றும் திருச்சியில் ஹரீஷ், கோவையில் கலையரசன் ஆகியோர் மீது போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் கோவையில் வக்கீலை தாக்கியதில் அவருடைய வயிற்றில் கடுமையான காயம் ஏற்பட்டு, அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவை தவிர தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த வக்கீல்கள் வீராசாமி, மாணிக்கம் ஆகியோர் ஒகேனக்கல்லைச் சேர்ந்த ரவுடிகளால் அரிவாளால் வெட்டப்பட்டனர். இந்த சம்பவத்தில் புகார் அளித்தும், இதுவரை ரவுடிகளை போலீசார் கைது செய்யவில்லை.
தமிழக போலீசாரின் இந்த போக்கை கண்டித்தும் வக்கீல்களை தாக்கிய போலீஸ்காரரையும், ரவுடிகளையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் வருகிற 6-ந் தேதி ஒரு நாள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதில் சுமார் 70 ஆயிரம் வக்கீல்கள் கலந்துகொள்கிறார்கள்.
இதன் பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு கூடி போராட்டத்தை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். அதன்படி போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications