திருச்செந்தூர் கோவிலில் கிரிக்கெட் வீரர் முரளிதரன் தரிசனம்
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தனது மனைவி மதிமலர் மற்றும் குடும்பத்தினருடன் இன்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் தரிசனம் செய்தார்.
இன்று காலை மனைவி மற்றும் குடும்பத்தினருடன் முரளிதரன் திருச்செந்தூர் வந்தார். அங்கு அவரை கோவில் நிர்வாகிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
பின்னர் அங்கு அவருக்கு சூரசம்ஹர மூர்த்தி சன்னதியில் வைத்து சத்குரு சம்ஹார யாகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு அவர் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று பயபக்தியுடன் வழிபட்டார். அங்கு அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதன்பிறகு அவர் மதுரைக்கு காரில் புறப்பட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications