ரெப்கோ வங்கிக்கு புதிதாக 25 கிளைகள்: திறந்து வைத்தார் ப. சிதம்பரம்
தேவகோட்டை: ரெப்கோ வங்கி புதிதாக 25 கிளைகளை திறந்துள்ளது. இதன் துவக்க விழா தேவகோட்டையில் நடந்தது. புதிய கிளைகளை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,
ரெப்கோ வங்கி 1969-ம் ஆண்டு வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்புபவர்களின் மறுவாழ்வுக்காக தொடங்கப்பட்டது. மற்ற வங்கிகள் அனைத்தும் நிதித் துறையின் கீழ் இயங்க இந்த வங்கி மட்டும் உள்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றது. ரெப்கோ வங்கி இன்று 25 புதிய கிளைகளை துவங்கியுள்ளது.
மாடமாளிகைகளில் வாழ்பவர்கள் யாரும் வங்கியில் கடன் பெற்று கறவை மாடு வாங்கி தொழில் செய்யப்போவதில்லை. ஏழை விவசாயிகளுக்கு கடன் கிடைத்தால் தான் மாடு, ஆடு போன்றவற்றை வளர்த்து பயனடைய முடியும்.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் தாங்கள் பெறும் கடனில் 99 சதவிகித்தை திரும்பச் செலுத்திவிடுகின்றனர். இந்தியா அடுத்த ஆண்டு பொருளாதாரத்தில் 9 சதவிகித வளர்ச்சியை நிச்சயமாக பெறும்.
கடந்த நிதியாண்டில் ரெப்கோ வங்கி நிர்ணயிக்கப்பட்ட வணிகமான ரூ.3,500 கோடியைவிட அதிகமாக ரூ.216 கோடியும், நிகர லாபமாக நிர்ணயிக்கப்பட்ட ரூ.42 கோடியைவிட அதிகமாக ஒரு கோடி ரூபாயும் ஈட்டியுள்ளது.
இந்த வங்கியில் 446 நபர்களுக்கு ரூ.1 கோடியே 17 லட்சம் உதவித்தொகை வழங்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications