குருவாயூர்: பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை, மீறினால் ரூ.500 அபராதம்
குருவாயூர்: கேரளாவில் உள்ள குருவாயூரில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அந்த நகராட்சி தடை விதித்துள்ளது. தடையை மீறி பயன்படுத்துபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை கொண்டு வந்து உபயோகித்துவிட்டு அங்கேயே போட்டுவிட்டு சென்று விடுகின்றனர். மக்கும் தன்மையில்லாத பிளாஸ்டிக்கால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுவருகிறது.
இதை தடுக்க, குருவாயூரில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடைவிதித்து, நகரசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
குருவாயூர் கோவில் நிர்வாகமும் இதற்கு ஒத்துழைப்பு அளித்துள்ளது. எனவே, இனி கோவில் பிரசாதங்களை பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பை அல்லது பேப்பரில் வழங்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுமட்டுமின்றி ஹோட்டல்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி பயன்படுத்துபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் குருவாயூர் நகரசபை எச்சரித்துள்ளது. இந்தத் தடை ஜூலை 1ம் தேதி முதல் அமலில் உள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications