மினரல் வாட்டர் நிறுவனத்திற்கு எதிர்ப்பு-2வது நாளாக குளத்தில் குடியிருக்கும் மக்கள்
Subscribe to Oneindia Tamil
கடையநல்லூர்: கடையநல்லூர் அருகே நயினாரகரத்தில் தனியார் மினரல் வாட்டர் தொழி்ற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக வள்ளியம்மாள்புரம் கிராம மக்கள் கண்மாயில் குடியிருப்பதால் பதற்றம் நீடிக்கிறது. பக்கத்து கிராம மக்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கடையநல்லுர் சட்டமன்ற தொகுதி நயினாரகரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வள்ளியம்மாள்புரத்தில் தனியார் நிறுவனம் ஒன்று நேற்று மினரல் வாட்டர் தொழிற்சாலையை துவக்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு மாதங்களாக அப்பகுதி மக்கள் முதல்வரின் சிறப்பு பிரிவு, மாவட்ட நிர்வாகம் உள்பட பல்வேறு அதிகார மையங்களுக்கு புகார் தெரிவித்து வந்தனர். ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
ஆனால் தங்கள் முயற்சி பலன் அளிக்காததால் நேற்று வள்ளியம்மாள்புரத்தை சேர்ந்த சுமார் 200 குடும்பத்தினர் ஆடு, மாடுகளுடன் உடைமைகளை எடுத்து கொண்டு மறிச்சிகட்டி கண்மாயில் குடியேறினர்.
நேற்று பெய்த மழையையும் பொருட்படுத்தாது கண்மாயில் கூரைகள் வேய்ந்து தங்கினர். இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்வதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications