புனே ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் ஜெஃப் மார்ஷ் நியமனம்
லக்னோ: புனே ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் ஜெஃப் மார்ஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சஹாரா நிறுவனம் புனே ஐபிஎல் அணியை வாங்கியுள்ளது. இந்த அணிக்கு சஹாரா புனே வாரியர்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜெஃப் மார்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார். உதவிப் பயிற்சியாளராக இங்கிலாந்தின் டெர்மாட் ரீவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து புனே அணியின் உரிமையாளரான சுப்ரதா ராய் கூறுகையில், உ.பி. வீரர்களுக்கு அணியில் நிறைய இடம் தரப்படும்.
எந்த அணியாக இருந்தாலும் பயிற்சியாளர்கள்தான் மிக முக்கியம். அந்த வகையில் மார்ஷ் மற்றும் ரீவ் ஆகியோர் பயிற்சியாளர்களாக கிடைத்துள்ளது மகிழ்ச்சி தருகிறது என்றார்.
50 டெஸ்ட் போட்டிகளிலும், 117 ஒரு நாள் போட்டிகளிலு்ம் ஆடியுள்ளார் மார்ஷ். 1999 ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். 2001 முதல் 2004 வரை ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளராகவும் அவர் செயல்பட்டார்.












Click it and Unblock the Notifications