விருப்ப ஓய்வில் செல்லுமாறு காங்கிரஸ் தலைமையக ஊழியர்களுக்கு உத்தரவு
டெல்லி: காங்கிரஸ்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வரும் பல ஊழியர்களை விருப்ப ஓய்வில் செல்லுமாறுக கட்சி நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனராம்.
செலவுக் குறைப்பு நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுகிறதாம். இதுகுறித்து மிக மிக வயதான தலைவர்களில் ஒருவரும், காங்கிரஸ் தலைமையக நிர்வாகியுமான மோதிலால் வோரா கூறுகையில், தற்போது தலைமை அலுவலகத்தில் நிறைய ஊழியர்கள் உள்ளனர். எனவே எண்ணிக்கையைக் குறைக்க வி.ஆர்.எஸ் திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை என்றார்.
இந்தத் திட்டத்தின்படி, விஆர் பெறும் ஊழியர்களுக்கு ஓய்வுக்கால பலன்கள் அனைத்தும் முழுமையாக தரப்படும். மேலும் மீதமுள்ள பணி ஆண்டுகளில் ஆண்டுக்கு 3 மாதம் வீதம் சம்பளம் தரப்படும்.
இந்தத் திட்டத்தால் ஓய்வு வயதை நெருங்கிய ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனராம். ஆனால் கல்யாணமாகாத குழந்தைகளை வைத்துள்ளோர், நடுத்தர வயதுடையவர்களுக்கு பெரும் கவலை ஏற்பட்டுள்ளதாம்.
இதுகுறித்து 55 வயதான சங்க்ராம் சிங் என்ற ஊழியர் கூறுகையில், எனக்கு வி.ஆர்.எஸ் மூலம் நல்ல பணம் கிடைத்தால் ஏற்றுக் கொள்வேன் என்றார்.
இன்னும் சில ஊழியர்கள் விஆர்எஸ் தர முன்வராவிட்டால் வேலையை விட்டு நீக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் உள்ளனராம்.
எல்லாம் சரி, பழம் தின்று கொட்டை போட்ட மோதிலால் வோரா என்ற மிக மிக வயதான தலைவர்களுக்கும் காங்கிரஸ் கட்சி வி.ஆர் அல்லது கட்டாய ஓய்வு கொடுக்க முன்வருமா?
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications