நெல்லை-தூத்துக்குடியில் ஒரே நாளில் 15 டி.எஸ்.பி.க்கள் மாற்றம்
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 15 டி.எஸ்.பி.க்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஐ.ஜி. லத்திகா சரண் பிறப்பித்துள்ளார்.
விளாத்திகுளம் டி.எஸ்.பி இக்னோஷியஸ் நெல்லை மாநகர டவுன் உதவி கமிஷனராகவும், திருச்செந்தூர் டி.எஸ்.பி நடராஜமூர்த்தி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூருக்கும், ராமநாதபுரம் டி.எஸ்.பி முருகேசன் தூத்துக்குடி கடலோர காவல் படைக்கும், வள்ளியூர் டி.எஸ்.பி ராஜன்ராய் நெல்லை வணிக குற்றப் பிரிவு புனலாய்வு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
நெல்லை டி.எஸ்.பி பெஸ்கி திண்டுக்கல் போதை தடுப்பு பிரிவுக்கும், அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி கோபாலன் ராமநாதபுரம் சமூக நீதி உரிமைகள் மற்றும் மனித உரிமை பிரிவுக்கும், நாங்குநேரி டி.எஸ்.பி உதயகுமார் விழுப்புரம் அருகேயுள்ள கோட்டைகுப்பத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
சேரன்மகாதேவி டி.எஸ்.பி தங்கதுரை பல்லடத்திற்கும், புளியங்குடி டி.எஸ்.பி பாஸ்கரன் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு ஆவண காப்பகத்திற்கும், நெல்லை டி.எஸ்.பி அந்தோணி ஞானசேகர் நாகப்பட்டிணம் கடலோர காவல்படைக்கும், மதுரை தல்லாக்குளம் உதவி கமிஷனர் இலங்கேஸ்வரன் நெல்லை மாநகர மதுவிலக்கு பிரிவு உதவி கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட பேரூரணி காவலர் பயிற்சி பள்ளி டி.எஸ்.பி சுனந்தபசுபதி நெல்லை போலீஸ் பணியிடை பயிற்சிக்கும், அருப்புகோட்டை டி.எஸ்.பி ஷாஜகான் நெல்லை மாவட்ட மதுவிலக்கு பிரிவிற்கும், திருப்பூர் மாவட்டம் அவினாசி உதவி கமிஷனர் காமராஜ் நெல்லை மாநகர குற்றப்பிரிவு ஆவண காப்பகத்திற்கும், பாளை குற்றபிரிவு உதவி கமிஷனர் பரமானந்தம் சென்னை புறநகர் குற்ற ஆவண காப்பகத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications