இலங்கை: சிங்கள வெறியர்கள் வன்முறை-ஐ.நா. அலுவலகம் மூடல்
நியூயார்க்& கொழும்பு: இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து திட்டமிட்டபடி இந்த மாத இறுதியில் விசாரணை தொடங்கும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் போராட்டங்கள் நடப்பது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை என்று ஐ.நா. அமைத்துள்ள நிபுணர் குழுவின் தலைவரான மர்சுகி தருஸ்மான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நிபுணர் குழு தனது பணிகளை ஆரம்பிப்பதற்காக இம்மாதம் மூன்றாவது வாரத்தில் கூடவுள்ளது. தேதி இன்னும் இறுதியாகவில்லை. இந்தக் குழுவை எதிர்த்து நடந்து வரும் போராட்டங்கள் குறித்து நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை.
இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் முட்டாள்கள் என்று இலங்கை அமைச்சர் வீரவன்ச குறியுள்ளது குறித்து கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என்றார் தருஸ்மான்.
கொழும்பு ஐ.நா. அலுவலகம் மூடல்:
இதற்கிடையே சிங்கள அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் நேற்று சிங்கள வெறியர்கள் ஐ.நா. அலுவலகத்தை தாக்கி உள்ளே புக முயன்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸார் கடுமையாகப் போராடி அலுவலகத்திற்குள் சிக்கிக் கொண்ட ஊழியர்கள் பத்திரமாக வெளியேற உதவினர்.
கலகக்காரர்கள் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் உருவப்படம், ஐ.நா. கொடி ஆகியவற்றை தீயிட்டுக் கொளுத்தி பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.
இந்தக் குழுவை பான் கி மூன் வாபஸ் பெறும் வரை போராட்டம் நடத்துவோம் என்று கூறி அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர் சிங்கள வெறியர்கள். இந்த வன்முறையைத் தொடர்ந்து ஐ.நா. அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
முன்னதாக போராட்டத்தின்போது வீர வன்ச கூறுகையில்,
இலங்கை போர் குற்றங்களை விசாரிக்க ஐ.நா. 3 நபர் குழுவை நியமித்துள்ளது.
வடக்கு, கிழக்குப் பிராந்தியங்களில் விடுதலைப் புலிகளிடம் இருந்து தமிழர்களை மீட்க போர் நடந்தது. அதிபர் ராஜபக்சேவின் வழிகாட்டுதலில் நடந்த இந்தப் போரில் மனித உரிமைகள் மீறப்படவில்லை.
ஆனால், ஐ.நா. குழு அந்த போர் குறித்து விசாரித்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அறிக்கை அளிக்க திட்டமிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றார்.
கடந்த திங்கட்கிழமை அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் இது குறித்து ராணுவ முன்னாள் தளபதியும், எதிர்க்கட்சி எம்.பி.யுமான சரத் பொன்சேகா பேசினார். அப்போது அவர் ஐ.நா. குழுவின் விசாரணையை இலங்கை அரசு தைரியமாக எதிர்கொள்ள வேண்டும், மனித உரிமைகள் மீறப்படவில்லை என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை அளிக்க வேண்டும் என்றார்.
மேலும் அவர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டே நடந்தது. அதில் மனித உரிமைகள் மீறப்படவில்லை. இந்தப் பிரச்னையில் ராணுவத்திற்கு என் ஆதரவு எப்பொழுதும் உண்டு என்றார்.
அமெரிக்கா கண்டனம்:
ஐ.நா.வுக்கு எதிராக கொழும்பில் நடந்து வரும் கலகங்கள் குறித்து அமெரிக்கா அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், விசாரணை நடத்துவதை தடுக்கக் கூடாது. விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கோரினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications