சென்னை: கேஸ் ஆட்டோ வெடித்து சிதறி 2 பேர் படுகாயம்
சென்னை & மதுரை: சென்னையில் கேஸ் மூலம் இயங்கும் ஆட்டோ வெடித்துச் சிதறியதில் சிறுவன், முதியவர் படுகாயமடைந்தனர்.
சென்னை கே.கே.நகர் பச்சையப்பன் தெருவை சேர்ந்த ராஜு (40) கேஸ் மூலம் இயங்கும் ஆட்டோ ஓட்டி வருகிறார். இன்று காலை கே.கே.நகரில் இருந்து 3 பேரை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு கொருக்குப்பேட்டை சென்றார்.
அங்கு அவர்களை இறக்கிவிட்டபோது கேஸ் கசிந்தது. இதையடுத்து கொருக்குப்பேட்டை ஒண்டிவீரன் கோவில் தெருவில் உள்ள மெக்கானிக்கிடம் ஆட்டோவை கொண்டு சென்றார்.
அங்கு கேஸ் கசிவை சரி செய்யும் முயற்சியில் மெக்கானிக் ஈடுபட்டபோது திடீரென ஆட்டோ வெடித்துச் சிதறி தீப்பிடித்துக் கொண்டது.
இதில் மெக்கானிக்கிடம் வேலை செய்யும் சிறுவன் கதிர், சாலையில் சைக்கிளில் சென்ற 60 வயது முதியவர் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
வேன் மோதி ஷேர் ஆட்டோ கவிழ்ந்து 12 மாணவர்கள் காயம்:
இதற்கிடையே மதுரையில் விதிகளை மீறி ஷேர் ஆட்டோவில் ஏராளமான மாணவர்களை ஏற்றிச் சென்றபோது நடந்த விபத்தில் 12 பேர் காயமடைந்தனர்.
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள பனைக்குளத்தில் இருந்து பள்ளி மாணவ- மாணவிகளை ஏற்றிக் கொண்டு ஒரு ஷேர் ஆட்டோ திருவாதவூருக்கு சென்றது.
அளவுக்கு அதிகமான மாணவ-மாணவிகளை ஏற்றிக் கொண்டு படுவேககத்தில் வந்த அந்த ஆட்டோ மீது இடையப்பட்டி என்ற இடத்தில் எதிரே வந்த வேன் மோதியது.
இதில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் ஆண்டிச்சாமி உள்பட 12 பள்ளி மாணவ-மாணவிகள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஒத்தக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications