நிறுவனங்கள் செலுத்திய நேரடி வரி 15.49 சதவீதம் அதிகரிப்பு
டெல்லி: நாட்டின் தொழில்துறை உற்பத்தி சிறப்பாக இருப்பதால் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனங்கள் செலுத்திய நேரடி வரி வசூல் 15.49 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதன்மூலம் ரூ.68,675 கோடி வரி வசூலாகியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் நேரடி வரி மற்றும் மறைமுக வரி மூலம் மொத்தம் ரூ.7.46 லட்சம் கோடி வருவாய் ஈட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதில், நேரடி வரிகள் வாயிலாக திரட்டப்பட உள்ள தொகை மட்டும் ரூ.4.30 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இது, சென்ற நிதியாண்டை விட 13 சதவீதம் அதிகம்.
ஆண்டின் முதல் காலாண்டில் நேரடி வரி வசூல் 15.49 சதவீதம் அதிகரித்துள்ளதால், நேரடி வரி வசூல் இலக்கை எட்டிவிட முடியும் என்ற நம்பிக்கையில் மத்திய அரசு உள்ளது.
மேலும் இந்த நிதியாண்டில் 3ஜி அலைவரிசை ஒதுக்கீடு வாயிலாக மத்திய அரசுக்கு ரூ.67,720 கோடி வருவாய் கிடைத்தது.
மேலும், வயர்லெஸ் பிராண்ட்பாண்ட் அலைவரிசை ஒதுக்கீடு வாயிலாக ரூ.38,540 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இதன்மூலம் எதிர்பார்க்கப்பட்டதைவிட ரூ.65,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதனால் நாட்டின் நிதிப் பற்றாக்குறையும் ஓரளவு குறையும்.
அதே நேரத்தில் பெட்ரோல், டீசல் விலைகள் மீதான கட்டுப்பாட்டை நீக்கியது, சமையல் கேஸ், மண்ணெண்ணெய் விலையை உயர்த்தியது ஆகியவற்றின் மூலம் வருவாய் பற்றாக்குறையும் பெருமளவில் குறையவுள்ளது.
இதனால் பட்ஜெட்டில் விழுந்த பற்றாக்குறையை சமாளிக்க வெளியில் கடன் வாங்குவதையும் மத்திய அரசு பெருமளவில் குறைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications