டைஜெஸ்டிவ் என்டோஸ்கோபி வாரம்: 100 ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை
சென்னை: டைஜெஸ்டிவ் என்டோஸ்கோபி வாரத்தை முன்னிட்டு சென்னை மெட் இந்தியா மருத்துவமனை சார்பில் 100 ஏழைகளுக்கு இலவச அறுவைச் சிகிச்சை செய்யப்படவுள்ளது.
இது தொடர்பாக மெட் இந்தியா மருத்துவமனையின் நிறுவனத் தலைவர் டாக்டர் டி.எஸ்.சந்திரசேகர் கூறியதாவது:
இந்திய கேஸ்ட்ரோ இண்டஸ்டைனல் சொசைட்டியின் 11-வது ஆண்டு மாநாடு ஜூலை 22-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் செரிமான நோய்கள் குறித்த டியூ-2010 என்ற சர்வதேச அளவிலான நேரடி பயிலரங்கு நடைபெறுகிறது. இதை தமிழக ஆளுநர் பர்னாலா ஜூலை 24-ம் தேதி தொடங்கி வைத்து, கேஸ்ட்டரோஎன்டராலஜி பற்றிய நூலையும் வெளியிடுகிறார்.
டைஜெஸ்டிவ் என்டோஸ்கோபி வாரம் 2010 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த மாநாடு 7 நாட்கள் நடக்கிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் உரையாற்றுகின்றனர்.
இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், செரிமான நோய்களுக்கான மருத்துவ ஆலோசனை பெற இலவச தொலைபேசி சேவையை (எண் 12789) தொடங்கி வைக்கிறார். செரிமான கோளாறுகள், மஞ்சள் காமாலை, ஹெபடைடிஸ் பி, கல்லீரல் நோய்கள், ஜீரண உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இந்தத் தொலைபேசி சேவையைப் பயன்படுத்தலாம்.
இந்தப் பயிலரங்கை முன்னிட்டு, நுங்கம்பாக்கத்தில் உள்ள மெட் இந்தியா மருத்துவமனையில் நடக்கும் முகாமில் செரிமான கோளாறுகளால் பாதிக்கப்பட்ட 100 ஏழை நோயாளிகளைத் தேர்ந்தெடுத்து இலவச அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. இந்த முகாம் ஜூலை 11-ம் தேதி காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரை நடத்தப்படும்.
இந்த இலவச சிகிச்சையைப் பெற விரும்பும் நோயாளிகள் தங்களது பெயர்களை மருத்துவமனையில் ஜூலை 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பதிவு செய்யலாம். பதிவு செய்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 98409 93132, 98409 93135, 044 28311415, 044 28311001 என்றார்.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications