தமிழகத்தில் மேலும் 42 பொறியியல் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி
சென்னை: தமிழகத்தில் 2010-11ம் கல்வியாண்டில் மேலும் 42 புதிய பொறியியல் கல்லூரிகளைத் தொடங்குவதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு ஏ.ஐ.சி.டி.இ அனுமதி அளிப்பது தொடர்பாக டெல்லியில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் ஏ.ஐ.சி.டி.இ தென் மண்டலத் தலைவரும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தருமான மன்னர் ஜவஹர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அதில் இந்த புதிய கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஏற்கனவே 431 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் கல்லூரிகளில் மொத்தம் 10,080 இடங்கள் உள்ளன.
இதில், சிறுபான்மை அல்லாத பொறியியல் கல்லூரிகள் 65 சதவீத இடங்களையும், சிறுபான்மை கல்லூரிகள் 50 சதவீத இடங்களையும் அரசு ஒதுக்கீட்டுக்கு அளிக்க வேண்டும்.
இதன்படி புதிய 42 கல்லூரிகள் திறக்கப்பட்டால் அரசு ஒதுக்கீட்டுக்கு மேலம் 5,500 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கலாம். தன்மூலம் இந்த ஆண்டு பி.இ. படிப்புகளில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கை 1.15 லட்சமாக உயரவுள்ளது.
இந்த இடங்கள் இப்போது நடைபெறும் பி.இ. கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும்.
இது குறித்து மன்னர் ஜவஹர் கூறுகையில், புதிய கல்லூரிகள் சென்னை அருகிலும், ஈரோடு, சேலம், கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் அமையவுள்ளன. எல்லா கல்லூரிகளும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் (இ.சி.இ.), கம்ப்யூட்டர் சயி்ன்ஸ் (சி.எஸ்.இ.) பாடப் பிரிவுகளைக் கோரியுள்ளன.
புதிய பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த அவற்றுக்கு சம்பந்தப்பட்ட அண்ணா பல்கலைக்கழகங்களின் இணைப்பு தகுதி வழங்குவது அவசியம். அது தொடர்பான பணிகள் அடுத்த ஒரு வாரத்துக்குள் முடிக்கப்படும். அதன் பின்னர், அந்தக் கல்லூரிகள் பி.இ. கலந்தாய்வில் உள்ள கல்லூரிகளின் பட்டியலில் இடம்பெறும்.
இவரை தவிர நேற்றைய கூட்டத்தில் 6 எம்.பி.ஏ. கல்லூரிகள், 1 கட்டடக் கலை கல்லூரி ஆகியவற்றுக்கும் ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி அளித்துள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications