ஏர் பிரேக் பைப்புகள் துண்டிப்பு-தமிழக எல்லையில் ரயிலை கவிழ்க்க சதி

கூடலூரிலிருந்து 50 கி.மீ. தொலைவில் கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ளது நிலம்பூர் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்திலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உட்பட கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம், கோழிக்கோடு மற்றும் கர்நாடக மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நிலம்பூரிலிருந்து சொரனூருக்கு இயக்கப்படும் ரயில், புதன்கிழமை இரவு இங்கு நிறுத்தப்பட்டிருந்தது.
நேற்று காலை இந்த ரயிலை இயக்குவதற்காக ஓட்டுனர் ஆலிக்குட்டி, உதவி ஓட்டுனர் ஜான் ஆகியோர் ரயில் நிலையம் வந்தனர். ரயிலை இயக்கும் முன் வழக்கமாக செய்யும் சோதனைகளை அவர்கள் மேற்கொண்டனர்.
அப்போது இரண்டு பெட்டிகளுக்கு இடையிலான ஏர் பிரேக் பைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன. 20 பைப்புகளை ஆக்ஸா பிளேடைக் கொண்டு ஒரு கும்பல் அறுத்துள்ளது.
இது குறித்து நிலம்பூர் போலீசுக்கு உடனடியாகத் தகவல் கொடுக்கப்பட்டது. மலப்புரம் மாவட்ட எஸ்பி சேதுராமன், ரயில்வே டிஎஸ்பி கரீம் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் விரைந்து வந்து சோதனை நடத்தினர்.
சரியான நேரத்தில் சதிச் செயல் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்திலிருந்து ரயில் தப்பியுள்ளது. ரயில் ஓட ஆரம்பித்திருந்தால் பிரேக்குகள் செயல்படாமல் அதை நிறுத்துவதே இயலாத காரியமாகியிருக்கும்.
ரயில்வே இணையமைச்சர் அகமது இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications