திமுக வேலைவாய்ப்பு முகாம்களால் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு-கனிமொழி

பாளையங்கோட்டை தொகுதியில் நடந்த வேலைவாய்ப்பு பயிற்சி முகாமை துவக்கி வைத்து கனிமொழி எம்.பி. பேசுகையில்,
ஒரு காலத்தில் சில சமூகத்தை சேர்ந்தவர்கள் சில ஜாதியை சேர்ந்தவர்களை தவிர பிறருக்கு படிப்பு எதற்கு, பெண்களுக்கு கல்வி எதற்கு என்ற நிலை இருந்தது. கல்விக்காக விதையிட்டு சமூக புரட்சி செய்தவர் பெரியார். அந்த விதையை பாதுகாத்து வளர்த்தவர் அண்ணா. அந்த மரம் நிழல் தரும் தருவாக இருக்கிறது. அதற்கு காரணம் முதல்வர் கருணாநிதி.
எனவே, அவருக்கு பிறந்த நாள் பரிசாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு ரூ. 40 ஆயிரம் கோடி முதலீடு வந்துள்ளது. வேலை தேடுவோர் அதிகம். ஆனால் வாய்ப்புகளோ குறைவு. வேலை வாய்ப்பு மூகாம் மூலம் இதுவரை 1 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது.
இதில் சிபாரிசுகளுக்கு இடமில்லை. கடந்த ஆட்சியாளர்கள் வேலையில் இருந்தவர்களை வீட்டுக்கு அனுப்பினார்கள். அவர்களுக்கும் வேலைவாய்ப்பு அளித்து புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி திமுக அரசு சாதனை படைத்துள்ளது.
முதல்வர் கருணாநிதி தனது வாழ்வில் தோல்விகளை சந்தித்த போதிலும் துவண்டுபோனதில்லை. எதிர்கட்சியாக இருந்தபோதிலும் மக்களை விட்டு செல்லவில்லை. கொடநாடு, ஏற்காடு, ஏலகிரிக்கு ஓடிப் போகவில்லை. எனவே எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் பாங்கோடு நேர்முக தேர்வுக்கு வாருங்கள் என்றார் கனிமொழி.
தாத்தா-பாட்டி சிலைக்கு அஞ்சலி
இதையடுத்து ராதாபுரம் புதிய பஸ்ஸ்டாண்டில் உள்ள தனது தாத்தா, பாட்டியான முத்துவேலர்-அஞ்சுகத்தம்மாள் முழு உருவ சிலைக்கு கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அவருடன் அமைச்சர்கள் மைதீன்கான், பூங்கோதை, எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் வந்திருந்தனர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications