கார் இறக்குமதி: சசிகலா கணவர் நடராஜன் மீதான வரி ஏய்ப்பு வழக்கு-26ம் தேதி தீர்ப்பு
சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜன், வெளிநாட்டில் இருந்து லெக்ஸஸ் காரை இறக்குமதி செய்ததில் வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், வரும் 26ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் உயிர்த் தோழியான சசிகலாவின் கணவர் நடராஜன் லண்டனில் இருந்து லெக்ஸஸ் காரை இறக்குமதி செய்தார்.
அப்போது அந்த கார், பயன்படுத்திய பழைய கார் என்று கணக்கு காட்டி குறைவான வரி கட்டப்பட்டது.
ஆனால், இது தொடர்பாக கார் ஆவணங்கள் சுங்கத்துறையினர் ஆய்வு செய்தபோது அது புத்தம் புதிய கார் என்று தெரியவந்தது. வரி ஏய்ப்பு செய்வதற்காக அதை பழைய கார் போல காட்ட போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்திருப்பதும் உறுதியானது.
இது குறித்து சுங்கத்துறை வழக்குத் தொடர்ந்தது. பிறகு இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
நடராஜன், அவரது மருமகன் பாஸ்கரன், வங்கி மேலாளர் சுசித்ரா, லண்டன் தொழிலதிபர் பாலகிருஷ்ணன், அவரது மகன் யோகி ஆகியோர் மீது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது.
இதில் பாலகிருஷ்ணனும், யோகியும் வழக்கு பதிவுச் செய்யப்பட்ட 1997ம் ஆண்டு முதலே தலைமறைவாக உள்ளனர்.
இந்த வழக்கு சென்னை சி.பி.ஐ. முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
வாதங்கள் முடிவடைந்த நிலையில் வரும் 26ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவி்க்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications