மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயருகிறது
மேட்டூர்: தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனத்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
மேட்டூர் அணை நீரை நம்பித்தான் காவிரி டெல்டா விவசாயிகள் உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12- ந் தேதி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் அணையில் போதிய நீர் இருப்பு இல்லை. இதனால், இன்னும் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.
இந்த நீர் எப்பொழுது வரும் என்ற ஏக்கத்துடன் இருக்கிறார்கள் டெல்டா விவசாயிகள். இந் நிலையில் கடந்த வாரம் தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் கனத்த மழை பெய்தது. இதனால், தற்போது அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இத்தனை நாட்களாக 79 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 8 மணி அளவில் 79.92 அடியாக இருந்தது. வினாடிக்கு அணைக்கு 2, 280 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இன்னும் கன மழை பெய்து, அணையின் நீர்மட்டம் மேலும் உயர்ந்தால் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வசதியாக இருக்கும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications