தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டை தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை 50 சதவீதத்துக்கு மேல் அமல்படுத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.
ஆனால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏற்கனவே 50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 69 சதவீதம் அளவுக்கு பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் அரசியல் சாசனத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் 69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தமிழ்நாட்டைச் சேர்ந்த வாய்ஸ் என்ற அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் விஜயன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். மண்டல் கமிஷனின் 50 சதவீத இடஒதுக்கீட்டு பரிந்துரைக்கு மேலாக அதிகரிக்கக் கூடாது என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று, 69 சதவீத இடஒதுக்கீட்டை இப்போதைக்கு தொடரலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், சுதந்தர்குமார் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் 50 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறார்களா என்ற விபரத்தை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் ஆதாரத்துடன் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
அரசின் அறிக்கைக்குப் பிறகு, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், இடஒதுக்கீட்டை முழுமையாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பு கூறியுள்ள நீதிமன்றம், இடஒதுக்கீடு குறித்து தமிழக அரசு புதிய சட்டத்தை கொண்டு வரலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் விஜயனின் வழக்கையும் பைசல் செய்யப்பட்டுவிட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications