இன்போசிஸ் லாபம் 2.4% சரிவு: பங்கு விலை 3% சரிவு
மும்பை: இன்போசிஸ் நிறுவனத்தின் ஏப்ரல்-ஜூன் முதல் காலாண்டுக்கான லாபம் 2.4 சதவீதம் சரிவடைந்துள்ளது.
முதல் காலாண்டில் இந்த நிறுவனம் ரூ. 1,488 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 2.4 சதவீதம் குறைவாகும்.
மேலும் கடந்த நிதியாண்டில் இந்த காலாண்டில் தான் இன்போசிஸ் மிகக் குறைந்த அளவாக 1,026 ஊழியர்களை மட்டுமே பணியில் சேர்த்துள்ளது.
ஐரோப்பிய பொருளாதாரத்தில் நிலவும் மந்தம், அந் நாடுகளில் இருந்து இன்போசிஸ் பிபிஓவுக்கு கிடைக்கும் ஆர்டர்கள் குறைந்து போனது ஆகியவையே இந்த சரிவுக்கு முக்கிய காரணமாகும்.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்த நிறுவனத்துக்கு வரும் ஆர்டர்கள் 20 சதவீதம் அளவுக்குக் குறைந்துள்ளன. அதே நேரத்தில் ஊழியர்களி்ன் உதியம் 10 முதல் 20 சதவீதம் உயர்த்தபட்டதாலும் லாபம் குறைந்துள்ளதாக இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
இதனால் இந்திய பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்கு விலை 3 சதவீதம் சரிந்து, அதாவது ரூ. 99.65 சரிவு ஏற்பட்டு, ரூ.1,488க்கு விற்பனையானது.
அதே போல அமெரிக்கப் பங்குச் சந்தையான நாஸ்டாக்கில் பட்டியலிடப்பட்டுள்ள இன்போசிஸ் பங்குகளின் விலையிலும் 3.44 சதவீதம் சரிவு ஏற்பட்டது.
பெரும் லாபம் ஈட்டப் போவதாக நினைத்து நேற்று முன் தினம் இந்த நிறுவனத்தின் பங்கு விலை அதிகபட்ச உயர்வைப் பெற்றது. ஆனால், நேற்று இந்த நிறுவனத்தின் காலாண்டு லாபம் குறைந்துபோனதாக அறிவிக்கப்பட்டதால் பங்கு விலை சரிந்தது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications