மதிய உணவில் அழுகிய முட்டை சாப்பிட்ட 190 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே உள்ள அரசு பள்ளிகளில் மதிய உணவில் அழுகிய முட்டை சாப்பிட்ட 190 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி அருகே பெரியமுத்தூர் ஊராட்சியில் உள்ளது நெற்குன்றி அரசு பள்ளி. இங்கு பயிலும் மாணவர்கள் 110 பேர் வழக்கம் போல் மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். உணவு அருந்திய சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்ப்பட்டனர்.
இதே போன்று, வேப்பனப்பள்ளி ஊராட்சி குரல் நத்தம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 80 பேர் மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கும் வாந்தி மயக்கம் ஏற்படவே, வேப்பனப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர்.
இந்த இரு பள்ளிகளிலும் மதிய உணவுடன் வழங்கப்பட்ட முட்டை அழுகிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications