ஐபிஎல் ஊழல்-இம்மாத இறுதிக்குள் அமலாக்கப் பிரிவின் விசாரணை அறிக்கை
டெல்லி: ஐபிஎல் பணப் பரிவர்த்தனை உள்ளிட்டவை குறித்து விசாரித்து வரும் அமலாக்கப் பிரிவு இந்த மாத இறுதிக்குள் தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும் எனத் தெரிகிறது.
ஐபிஎல் அணிகள் வாங்கப்பட்டதிலும், அதன் நிர்வாகத்திலும் பெருமளவில் பண மோசடிகள், முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்தும், ஐபிஎல் அணிகளில் முதலீடு செய்திருப்போர் குறித்தும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பான விசாரணை அறிக்கை இந்த மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐபிஎல் அணிகளில் முதலீடு செய்துள்ள தனி நபர்கள், நிறுவனங்கள் குறித்த முழு விவரங்களும் சேகரிக்கப்பட்டு விட்டதாம். மேலும், மொரீஷியஸ், கேமேன் தீவுகள் ஆகியவற்றில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.
இந்த மாத இறுதியில் அனைத்து விவரங்களும் அடங்கிய முழு விவர அறிக்கை நிதியமைச்சக்திடம் சமர்ப்பிக்கப்படும்.
ஐபிஎல் டுவென்டி 20 தொடரில் புழங்கிய கருப்புப் பணம் குறித்த விவரங்களை வெளிக் கொணருவதே இந்த விசாரணையின் முக்கியநோக்கமாக இருந்தது.
ஐபிஎல் கொச்சி அணிதொடர்பான விவகாரம் வெடித்ததைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்கப் பிரிவின் விசாரணை தொடங்கியது.
கொச்சி அணி தொடர்பாக வெளியுறவுத்துறை இணை அமைச்சராக இருந்த சசி தரூருக்கும், ஐபிஎல்லின் ஆணையராக இருந்த லலித் மோடிக்கும் இடையே மோதல் வெடித்தது. கடைசியில் இருவரும் பதவிகளை இழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications