கடல் அட்டைகள், கடல் சங்குகள் கடத்தல்: 5 பேர் கைது
தூத்துக்குடி: இலங்கையில் இருந்து கடல் சங்குகளை தமிழகத்திற்கும், தூத்துக்குடியில் இருந்து கடல் அட்டைகளை இலங்கைக்கும் கடத்திய கும்பலை ஏழாம் தீடை பகுதியில் இலங்கை கடற்படையினர் மடக்கி பிடித்தனர்.
தமிழக கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கும், அங்கிருந்து தமிழக பகுதிகளுக்கும் நடக்கும் சட்டவிரோத கடத்தல் சம்பவங்களை தடுக்க இரு நாட்டு கடற்படையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை கடற்படையினர் ஏழாம் தீடை பகுதியில் ரோந்து கப்பலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, தூத்துக்குடி கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டை கடத்திய நாட்டு படகு சிக்கியது. படகில் இருந்த 3 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதே போல் இலங்கையில் இருந்து இரு பைபர் படகுகளில் இந்தியாவுக்கு கடல் சங்குகள் கடத்தப்பட்டது.
இரு பைபர் படகுகளையும் இலங்கை கடற்படையினர் மடக்கி, அதில் இருந்த இருவரை கைது செய்தனர். மூன்று படகுகள், அதில் இருந்த கடல் அட்டைகள் மற்றும் கடல் சங்குகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்ட 5 பேரையும் விசாரணைக்காக இலங்கைக்கு அழைத்து சென்றனர்.
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு நாட்டு படகில் கடல் அட்டைகளை கடத்தியது யார் என தமிழக புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications