திருமண நிகழ்ச்சியில் பெண்களை செல்போனில் படம் பிடித்த விவகாரம்: வாலிபரை தாக்கிய 3 பேர் கைது
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் இளம்பெண்களை செல்போனில் படம் பிடித்ததை தட்டிகேட்ட வாலிபரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சங்கரன்கோவில் காயிதே மில்லத் 2-வது தெருவை சேர்ந்தவர் அக்பர். இவரது மகளின் திருமணம் கடந்த 15-ம் தேதி நடந்தது. திருமண விழாவிற்கு வந்த இளம்பெண்களை சில வாலிபர்கள் செல்போனில் படம் பிடித்தனர்.
இதை திருமணத்திற்கு வந்த இரும்பு வியாபாரி சாகுல் ஹமீது தட்டி கேட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பினர்.
இந்த நிலையில், சாகுல் ஹமீது தாக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த காயிதே மில்லத் 1-வது தெருவை சேர்ந்த ஜியா உல்ஹக், சதாம் உசேன், யூசுப், புது முதலாம் தெருவை சேர்ந்த பீர்மைதீன், 2-ம் தெருவை சேர்ந்த தாஹீர், இஸ்மாயில் என்பவரின் மனைவி செய்யது அலி பாத்திமா ஆகிய 6 பேர் நேற்று சாகுல் ஹமீதை சரமாரியாக தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த அவர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து சங்கரன்கோவில் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் திருமலைக்குமார் விசாரணை நடத்தி ஜியா உல்ஹக், சதாம் உசேன், பீர்மைதீன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும், 3 பேரை தேடி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications