வியட்நாம், தென் ஆப்பிரிக்கா போல ஈழத் தமிழ் இனமும் வெல்லும்-நெடுமாறன்

பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில், கர்நாடகத் தமிழர் இயக்கம் சார்பில் நேற்று நடைபெற்ற ஒருங்கிணைந்த தமிழ் தேசிய இன விடுதலை எழுச்சி மாநாட்டில் பேசுகையில் நெடுமாறன் இவ்வாறு கூறினார்.
அவர் பேசுகையில்,
உலகத் தமிழர்களின் வரலாற்றில் இது மிகவும் சோதனைக்காலம். தமிழன் என்ற அடையாளமே தெரியாமல் தமிழர்களை அழிக்கும் பணியில் இந்தியா உள்ளிட்ட சில உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அந்த நாடுகள் சேர்ந்து இலங்கைப் போரில் 2 லட்சம் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்ய உதவின. இதை உலக நாடுகள் வேடிக்கை பார்த்தன.
எந்த ஒரு இனத்தையும் வல்லரசு நாடுகள் ஒடுக்கியதாக வரலாறு கிடையாது. பிரெஞ்சு மற்றும் அமெரிக்கப் படைக்கு எதிரான போரில் வியட்நாமும், வெள்ளையர்களுக்கு எதிரான போரில் தென்னாப்பிரிக்காவும் வெற்றிபெற்றதைப் போல ஈழத் தமிழினமும் வெற்றிபெறும்.
இலங்கையில் நடந்து முடிந்த போர், உலகத் தமிழர் விடுதலைக்கான முதல் கட்ட போராட்டமாகும். இலங்கையில் தமிழர்களுக்கு நேர்ந்த கதி மலேசியா நாட்டுக்கோ தமிழ்நாட்டுக்கோ பிற மாநிலத் தமிழர்களுக்கோ நேரலாம்.
இனியும் எந்த ஒரு நாட்டின் உதவிக்காகவும் காத்திருக்காமல், ஏமாறாமல் உலகிலுள்ள 10 கோடித் தமிழர்கள் ஒன்று சேர்ந்து உலகத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை நடத்தி வெற்றிகாண வேண்டிய தருணம் வந்து விட்டது என்றார் நெடுமாறன்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications