30 போயிங் விமானங்களை வாங்குகிறது எமிரேட்ஸ்
Subscribe to Oneindia Tamil

ஏற்கனவே 71 777- 300 இ.ஆர் விமானங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டது. இதில் தற்போது 53 விமானங்கள் உபயோகத்தில் உள்ளது. தற்போது வாங்கவுள்ள 30 விமானங்களையும் சேர்த்து மொத்தம் 101 போயிங் விமானங்கள் எமிரேட்ஸ் ஏர்லைன்சிடம் உள்ளது.
இதற்கான ஒப்பந்தம் ஐக்கிய அமீரகத்தின் பிதம மந்திரியும், துபாயின் மன்னருமாகிய ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் முன்னிலையில் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் எமிரேட்ஸ் ஏர்லைனின் தலைவர் ஷேக் அஹமது பின் சயீத் அல் மக்தூம் மற்றும் போயிங் விமானங்களின் தலைவர் ஜிம் அல்பாக் ஆகியோருக்கு இடையில் கையெழுத்தானது.
உலகிலேயே எமிரேட்ஸ் தான் அதிகமான 777 ரக விமானங்களை வைத்துள்ளது. இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் எமிரேட்ஸ் உலகின் பயணிகள் சேவையில் முன்னோடியாக திகழும்.












Click it and Unblock the Notifications