மகாராஷ்டிராவில் கைதான சந்திரபாபு நாயுடு மீதான வழக்குகள் வாபஸ்-ஹைதராபாத் திரும்பினார்

மகாராஷ்டிர மாநிலம் கோதாவரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாப்லி அணையிலிருந்து மகாராஷ்டிரா அதிக அளவில் தண்ணீரை எடுப்பதாக கூறிய நாயுடு தனது கட்சி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களுடன் மகாராஷ்டிராவுக்கு படையெடுத்தார்.
ஆனால் எல்லையிலேயே அனைவரையும் தடுத்து நிறுத்திக் கைது செய்தது மகாராஷ்டிர அரசு. பின்னர்அனைவரையும் தர்மாபாத் ஐடிஐ வளாகத்தில் அடைத்து வைத்தனர். இந்த நிலையில் நேற்று அங்கு புகுந்த மகாராஷ்டிர போலீஸார் தடியடி நடத்தி அனைவரையும் வலுக்கட்டாயமாக பஸ்களில் ஏற்றி அவுரங்காபாத் கொண்டு சென்று சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து ஆந்திராவில் பெரும் பதட்டம் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. நிலைமை கை மீறிப் போவதை உணர்ந்த மகாராஷ்டிர அரசு நாயுட உள்ளிட்டோர் மீதான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்றது. இதையடுத்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து தனி விமானத்தை வரவழைத்து நாயுடு உள்ளிட்டோரை அதில் ஏற்றி நேற்று இரவு ஹைதராபாத் கொண்டு வந்து விட்டது மகாராஷ்டிர அரசு.
விமான நிலையத்தில் அவர்களை நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ் பாபு உள்ளிட்டோர் வரவேற்றனர். பெரும் திரளான தெலுங்கு தேசம் தொண்டர்களும் திரண்டு வந்திருந்தனர். அனைவரும் காங்கிரஸ் கட்சியையும் மகாராஷ்டிர அரசையும் கண்டித்து கோஷமிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications