வருமான வரிக்கான ரிட்டர் தாக்கல்-சென்னையில் 40 சிறப்பு கவுன்டர்கள் அமைப்பு
சென்னை: வருமான வரி செலுத்தியது தொடர்பான ரிட்டர்னைத் தாக்கல் செய்ய வருகிற 31ம் தேதியுடன்கடைசிநாள் என்பதால் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக சென்னையில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் 40 சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்படுகின்றன.
2009-10ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதி கடைசி நாளாகும். இதையடுத்து பெருமளவிலானார் கணக்குகளை தாக்கல் செய்ய ஆரம்பித்துள்ளனர். வழக்கமாக கடைசி நாட்களின்போதுதான் பெருமளவில் தாக்கல் செய்ய வருவார்கள்.
இதனால் கடைசி நாட்களில் கூட்டம் நிரம்பி வழியும். இதைக் கருத்தில் கொண்டு சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் சென்னை வருமான வரி அலுவலகத்தில் 40 சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்படுகின்றன. இவை ஜூலை 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை செயல்படும்.
இந்த நாட்களில் தினசரி காலை 9.45 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த சிறப்பு கவுன்டர்கள் செயல்படும். இதில், மூத்த குடிமக்கள், மாற்றுத்
திறனாளிகளுக்காக தனியாக ஒரு கவுன்டர் செயல்படும்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்த சிறப்பு கவுன்டர்களில் தாம்பரம், காஞ்சிபுரத்தில் அடங்கியுள்ள சென்னை புறநகர்களைசத் சேர்ந்த மாதச் சம்பளதாரர்களும் ரிட்டர்னைத் தாக்கல் செய்யலாம்.
கணக்கு தாக்கலின்போது கண்டிப்பாக பான் எண்ணை குறிப்பிட வேண்டும். இது இல்லாத சரல் படிவங்கள் ஏற்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வசதிக்காக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் சரல் படிவத்தை www.incometaxindia.gov.in என்ற இணையதளம் மூலமும் டவுன்லோடு செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications