கொப்பரைத் தேங்காயின் வரத்து குறைவால் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

கொச்சி: தொடர் மழையால் கேரள சந்தைக்கு கொப்பரைத் தேங்காயின் வரத்து குறைந்துள்ளது. இதனால், இந்த வாரம் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று ரூ. 5,325 க்கு விற்ற ஒரு குவின்டால் தேங்காய் எண்ணெய் தற்போது ரூ. 5,375 க்கு விற்கப்படுகிறது.

தமிழ் நாட்டில் உள்ள காங்கேயத்தில் தேங்காய் எண்ணெயின் விலை ரூ. 5,300 ஆக அதிகரித்துள்ளது. எனவே, இரு மாநிலங்களிலும் இடையே உள்ள விலை வித்தியாசம் குறைந்துள்ளது. காங்கேயம் சந்தைக்கு கொப்பரைத் தேங்காய் குறைவின்றி வருகிறது. இருப்பினும் இரு மாநிலங்களுக்கும் இடையே உள்ள விலை வித்தியாசம் குறைவால் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் எண்ணெய் வரவில்லை என்று கொச்சின் எண்ணெய் வர்த்தகர்கள் சங்கத் தலைவர் பிரகாஷ் பி. ராவ் தெரிவித்தார்.

கேரள சந்தையில் விற்கப்படும் 100 டன் தேங்காய் எண்ணெயில் 30 டன் தமிழகத்தில் இருந்து வருவது தான். தற்போது வரத்து குறைந்துள்ளதால் கொப்பரைத் தேங்காயின் விலை ஒரு குவின்டால் ரூ.3,600-ல் இருந்து ரூ.3,800 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற எண்ணெய்களின் விலையில் மாற்றம் இன்றி இருப்பதும், ஓனம் பண்டிகை நெருங்குவதும் தான் இந்த விலை ஏற்றத்திற்கு காரணம். பாமாயிலின் விலை ரூ. 4,200 ல் நிலையாக இருந்தாலும் உயர் ரக பாம் கர்னல் ஆயிலின் விலை ரூ. 5, 300 ஆக உள்ளது.

சோப்பு, ஷாம்பு, அழகுசாதன எண்ணெய் தயாரிப்பாளர்கள் தங்கள் தேவைக்கு தொடர்ந்து தமிழகத்தை தான் நம்பியுள்ளனர். விலை சிறுது அதிகரித்தபோதிலும் மாரிகோ, டாபர் இந்தியா நிறுவனங்கள் தொடர்ந்து தமிழகத்தில் தான் வாங்குகிறார்கள்.

கேரள சந்தை உணவிற்கு பயன்படுத்தும் எண்ணெய் விற்பனைக்கு பிரதானமானது. தற்போதுள்ள குறைந்த விலை வித்தியாசத்தால் தொழில் நுகர்வோரும் கேரள சந்தைக்குள் மீண்டும் நுழையக் கூடும். கடந்த திங்கட்கிழமை அன்று மட்டும் சுமார் 50 டன் தேங்காய் எண்ணெய் வாங்கியுள்ளது விப்ரோ.

ஓனம் பண்டிகை வருவதால், கேரளாவில் உணவிற்கு பயன்படுத்தும் எண்ணெயின் தேவை அதிகரிக்கும். இதனால், வரும் மாதத்தில் அளவில் தேவைஇந்த நிலை வரும் மாதத்தில் தேங்காய் எண்ணெயின் விலை குறைய வாய்ப்பில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+