அன்னிய முதலீடு-தொழில் வளர்ச்சி: முதலிடம் நோக்கி தமிழகம்- ஸ்டாலின்
சென்னை: அன்னிய முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்வதாகவும், தொழில் வளர்ச்சியில் முதலிடத்தை நோக்கி பீடுநடை போட்டு வருவதாகவும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கொரியாவின் முன்னணி சாக்லேட் நிறுவனமான லோட்டே கன்பெக்ஷனரி பிரபல தமிழக சாக்லேட் நிறுவனமான பாரி கன்பெக்ஷனரி நிறுவனத்தை கடந்த 2004ம் ஆண்டு வாங்கியது.
காபிபைட், கேரமில்க், லோட்டோகிங், எக்ளர்ஸ், சாக்கோ, சான்விச் பிஸ்கெட், லோட்டே சாக்கோ பை என்ற உள்ளிட்ட பிரபல வகைகளை இந்நிறுவனம் இந்தியாவில் விற்று வருகிறது.
இதில் இந்த சாக்கோ பை சாக்லேட் உற்பத்தி்க்காக சென்னையை அடுத்த நேமம் பகுதியில் புதிய தொழிற்சாலையை இந்த நிறுவனம் கட்டியுள்ளது.
மாதத்துக்கு 500 டன் சாக்கோ பை சாக்லேட்டை இங்கு உற்பத்தி செய்ய முடியும. இந்த தொழிற்சாலையை துணை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, புதிய சாக்லெட் வகைகளை அறிமுகம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையி்ல், தென் கொரிய நாட்டைச் சேர்ந்த லோட்டே நிறுவனம் இந்தியாவில் பல்வேறு தொழில் முதலீடுகளை செய்து வருகிறது.
கொரிய நிறுவனங்கள் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளன. அந்த நாட்டைச் சேர்ந்த ஹூண்டாய், சாம்சங், லோட்டே, எல்ஜின், குவாசின், போஸ் ஹூண்டாய் ஆகியவை தமிழ்நாட்டில் தொழில் தொடங்கியுள்ளன.
சென்னையில் மட்டும் 160 கொரிய நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவில் 8,400 கொரிய மக்கள் வசிக்கின்றனர். அதில் சென்னையில் மட்டும் 3,000 பேர் வாழ்கின்றனர்.
சென்னைக்கு அருகே தென் கொரியாவின் சிறு, குறு நிறுவனங்களின் தொழில் முனையம் ஒன்றை தமிழக அரசு அமைக்கவுள்ளது.
தகவல் தொடர்பு, வாகன உற்பத்தி, ஜவுளி, மின்னணு, தோல் பொருட்கள் உற்பத்தியில் சென்னை ஏற்கனவே முன்னிலையில் உள்ளது. தற்போது உணவுப் பதப்படுத்தும் தொழிலிலும் தமிழகம் முக்கிய மையமாக வளர்ந்துள்ளது.
தொழில் துறையில் தமிழகம் புகழ் மிக்க கடந்த காலத்தையும், எழுச்சி மிகு நிகழ்காலத்தையும், பிரகாசமான எதிர்காலத்தையும் கொண்டுள்ளது. நாட்டிலேயே தற்போது தொழில்மயமாவதில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
இந்தியாவிலேயே வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் முதல் மூன்று மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.
அமெரிக்காவின் மிகப் பிரபலமான வால்ஸ்ட்ரீட் ஜர்னல், சென்னை புதிய டெட்ராய்ட்டாக உருவெடுத்து வருகிறது என்று புகழ்ந்துரைத்துள்ளது. தொழில் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டுள்ள முதல்வர் கருணாநிதி மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொழில் வளர்ச்சி காண வேண்டும் என கருதி சிறப்பு சலுகைகளை வழங்கி தொழில் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறார்.
குறிப்பாக தென் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை காரணமாக அண்மைக் காலத்தில் அப்பகுதியில் குறிப்பிடத்தக்க அளவுக்கு கணிசமான முதலீடு வந்துள்ளது.
கடந்த வாரம் கூட தூத்துக்குடியில் ரூ.2,500 கோடியில் கூட்டு முயற்சியிலான உணவு பதப்படுத்தும் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் என் முன்னிலையில் கையெழுத்தானது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெறுகிறது.
10,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இந்த தொழிலில் முதலீடு செய்ய கொரிய நிறுவனங்கள் உள்பட அனைவரும் முன்வர வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் லோட்டே இந்தியா நிறுவனத் தலைவர் யாங் டாக் கிம், நிர்வாக இயக்குனர் மியுங் கி மின், துணைத் தலைவர் டாங் பின் சென், தொழில்துறை முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குழந்தைகளுக்கு கண்ணாடிகள் வழங்கிய கருணாநிதி:
தமிழக பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர் இடையே கண்பார்வைக் குறைபாடுகள் உள்ளனவா எனக் கண்டறிந்து, அவற்றைப் போக்க, உரிய மருத்துவ உதவிகளை அளிக்க கண்ணொளி காப்போம் திட்டம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநாகராட்சிப் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளிகள், அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் ஆறு, ஏழு, எட்டு ஆகிய வகுப்புகளில் பயிலும் 1 லட்சத்து 412 மாணவ மாணவியர்க்குக் கண் மருத்துவ நிபுணர்கள் மூலம் கண் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
பரிசோதனையில் 9,500 குழந்தைகளுக்குக் கண் பார்வையில் குறைபாடுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதில் முதற்கட்டமாக 5,186 மாணவ- மாணவியர்க்கு ரூ. 20 லட்சம் செலவில் கண்ணாடிகள் வழங்கப்படுகின்றன.
முதல்வர் கருணாநிதி இன்று புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 20 குழந்தைகளுக்கு இலவசக் கண்ணாடிகளை வழங்கி, இந்தப் பணியைத் துவக்கி வைத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications