பெண் டாக்டருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.கள்: 4 பேர் கைது
நெல்லை: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் பெண் டாக்டருக்கு செல்போனில் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி நேதாஜி நகர் நடராஜன், பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரம் பால்ராஜ், மூன்றடைப்பு சுப்பிரமணியன், சிந்துபூந்துரை பாலகிருஷ்ணன் ஆகியோர் பல்வேறு இடங்களுக்கு சென்று எலக்ட்ரிக்கல் வேலை செய்து வருவது வழக்கம்.
கடந்த சில தினங்களுக்கு முன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சில பழுது வேலை செய்ய வந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த ஒரு பெண் டாக்டரின் செல்போன் நம்பரை எப்படியோ தெரிந்து கொண்டனர். வேலை முடிந்து ஊர் திரும்பிய அவர்கள் அந்த டாக்டரின் செல்போனுக்கு அடிக்கடி ஆபாச எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பினர்.
பணியில் இருந்த டாக்டருக்கு அந்த எஸ்.எம்.எஸ்.கள் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இது குறித்து அவர் ஐகிரவுண்ட் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்து உள்ளிட்ட போலீசார் டாக்டரின் செல்போனுக்கு வந்த நம்பரை வைத்து விசாரணை நடத்தினர்.
இதில் எஸ்.எம்.எஸ் அனுப்பியது மருத்துவமனையில் வேலை பார்த்த எலக்ட்ரீசியன்கள் தான் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications