தண்டவாளத்தில் விரிசல்-பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: உளுந்தூர்ப்பேட்டை அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த தண்டவாளத்தைக் கடந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியுள்ளது.
உளுந்தூர்ப்பேட்டை அருகே பூமாம்பாக்கம் என்ற இடத்தில் இன்று காலை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது வித்தியாசமான சத்தம் கேட்டதைத் தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டது.
ஊழியர்கள் பரிசோதித்து பார்த்தபோது ரயில் தண்டவாள இணைப்பில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த விரிசலை ரயில்வே ஊழியர்கள் சரி செய்தனர்.
இதன் காரணமாக பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட தென் மாவட்ட ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாகின.












Click it and Unblock the Notifications