தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல்-அமைதியான வாக்குப்பதிவு
Subscribe to Oneindia Tamil
மதுரை: தமிழகம் முழுவதும் காலியாக உள்ள உள்ளாட்சி இடங்களுக்கான இடைத் தேர்தல் இன்று அமைதியான முறையில் நடந்தது.
தமிழகத்தில் 923 உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளது. இதற்கான மனு தாக்கல் ஜூலை 3 ம் தேதி துவங்கியது. ஜூலை 10 ம் தேதி வரை மனு தாக்கல் நடைபெற்றது. ஜூலை 14 ம் தேதி வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டு இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று வியாழக்கிழமை காலை தொடங்கியது. வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது. எந்த இடத்திலும் வன்முறை ஏற்பட்டதாக தகவல் இல்லை.
பதிவான வாக்குகள் ஜூலை 24 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications