உணவு பணவீக்கம் 12.47% ஆக குறைவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜுலை 10ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் உணவு பொருள்களுக்கான பணவீக்க விகிதம் 12.47 சதவீதமாகக் குறைந்துள்ளது. முந்தைய வாரத்தில் இது 12.81 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மதிப்பீட்டுக்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட காய்கறிகள், பயறு வகைகள், கடல் மீன்கள், மக்காச் சோளம் மற்றும் துவரம் பரு�பு ஆகியவற்றின் விலை குறைந்திருந்தது.

அதே நேரத்தில் கோழி இறைச்சி, பால் பொருள்கள், பழங்கள் போன்றவற்றின் விலை அதிகரித்திருந்தது.

நடப்பு ஆண்டில் ஜுன் மாத மத்தியில் உணவுப் பொருள்களுக்கான பணவீக்க விகிதம் 16 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. பின்னர் அது 13 சதவீதத்திற்கும் கீழ் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

டிசம்பரில் பணவீக்கம் 6% ஆக குறையும்:

இந் நிலையில் டிசம்பர் மாதத்திற்குள் பணவீக்கம் 6 சதவீதமாகக் குறையும் என்று அமைச்சரவைச் செயலாளர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

நிருபர்களிடம் அவர் கூறுகையில், பருவ மழை திருப்திகரமாக உள்ளது. எனவே உணவுப் பொருள்களின் விலை நிச்சயம் குறையும். இதனால் உணவுப் பணவீக்கம் மேலும் குறையும். எனவே பணவீக்கம் குறைந்து பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.

கடந்த சில மாதங்களாக நாட்டின் பணவீக்கம் இரட்டை இலக்கத்தைத் தொட்டுள்ளது.

அதேபோல நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதத்தை எட்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+