கும்பாவுருட்டி பலாத்கார விவகாரம் : விசாரணை அதிகாரி மாற்றம்
செங்கோட்டை: கும்பாவுருட்டி அருவியில் தமிழக பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் திடீரென மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக கொல்லம் டி.எஸ்.பி. வரதராஜன் இவ்வழக்கை விசாரிக்க உள்ளார்.
கேரள வனப்பகுதியில் உள்ள கும்பாவுருட்டி அருவிக்கு சுற்றுலா சென்ற தமிழக பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக மணிகண்டன், சாகுல் ஹமீது, உன்னி கிருஷ்ணன் ஆகிய 3 கேரள வனத்துறை வழிகாட்டிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள்.
இவர்களை காப்பாற்ற ஆளும் கட்சி பிரமுகர்கள் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை குழத்துபுழா இன்ஸ்பெக்டர் சந்தோஷ் விசாரித்து வந்தார். இவருடைய காவலில் இருந்த 3 பேரும் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடினர். பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் விசாரணை பொறுப்பில் இருந்து சந்தோஷ்குமார் நேற்று திடீரென மாற்றப்பட்டார்.
அவருக்கு பதிலாக கொல்லம் போதை பொருள் கண்காணி்ப்பு டி.எஸ்.பி. வரதராஜன் தலைமையில் விசாரணை நடைபெறும் என கேரள வனத்துறை அமைச்சர் பினோய் விஸ்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், குற்றவாளிகளை காப்பாற்ற எந்த அரசும் முயற்சிக்கவில்லை. முதல் கட்ட விசாரணை முடிந்து விட்டது. பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தந்தால் மட்டுமே மேற்கொண்டு விசாரணை நடத்த முடியும் என்றார். இதற்கிடையே புனலூர் வனத்துறை பறக்கும்படை அதிகாரி நேற்று செங்கோட்டைக்கு வந்து தமிழக வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications