புரோக்கர் மூலம் முன்பதிவு ரயில் டிக்கெட்: 4 பேர் சிக்கினர்
நெல்லை: நெல்லை ரயில் நிலையத்தில் புரோக்கர்கள் மூலம் மொத்தமாக டிக்கெட் முன்பதிவு செய்யப்படுவதால் பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்படுவதாக புகார்கள் சென்றுள்ளன. மேலும், தட்கல் முறையில் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் திண்டாடிய தகவலும் கிடைத்துள்ளது.
இதை தொடர்ந்து நெல்லை சந்திப்பில் உள்ள ரயில்வே முன்பதிவு கவுன்டர்கள், பாளையங்கோட்டை வார்டு அலுவலகத்தில் உள்ள முன்பதிவு கவுன்டர்களில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் அனில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், அவினேஸ் குமார், ராமையா உள்ளிட்ட போலீசார் இன்று காலை ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் அதிகாலையிலேயே வந்து கவுன்டர் முன்பு பழைய செருப்பு, கற்கள் வைத்து இடம் பிடித்து கூடுதலாக டிக்கெட் எடுத்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த அதிரடி சோதனையை முன்கூட்டியே அறிந்த சில புரோக்கர்கள் தப்பி ஓடி விட்டாதக கூறப்படுகிறது. இந்த சம்பவம் இன்று காலை நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications