மும்பைப் பெண்களை சென்னையில் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்-இருவர் கைது
சென்னை: மும்பையிலிருந்து பெண்களை சென்னைக்கு அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பலைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கத்தில் உள்ள ஒரு கெஸ்ட் அவுஸ் முதல் மாடியில் விபசார விடுதி இருப்பதாக சி.பி. சி.ஐ.டி. போலீசுக்கு தகவல் கிடைத்தது.
உடனே டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில் போலீஸார் விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு 3 பெண்கள் இருந்தனர். அவரக்ளில் ஒருவர் மும்பையை சேர்ந்த 17 வயதேயான சிறுமி. இவரை சினிமா ஆசை காட்டி ஒரு கும்பல் சென்னைக்குக் கூட்டி வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த விபச்சார விடுதியை நடத்தி வந்த புரோக்கரான மதுராந்தகத்தைச் சேர்ந்த லட்சுமணனையும், அவரது உதவியாளரான கமலையும் போலீஸார் கைது செய்தனர்.
இந்த லட்சுமணன் ஏற்கனவே பலமுறை கைதானவர். இருப்பினும் தொடர்ந்து இத்தொழிலில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீ்ழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.
லட்சுமணனிடம் நடத்திய விசாரணையில் மேத்தா நகரில் நடத்தி வந்த விபச்சார விடுதி குறித்துத் தெரிய வந்தது. அங்கு நடத்திய சோதனையில் ஐந்து பெண்கள் சிக்கினர்.
பிடிபட்ட 8 பெண்களில் நான்கு பேர் 18 வயது கூட நிரம்பாதவர்கள். அனைவரையும் மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் போலீஸார் சேர்த்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் சினிமா ஆசையில் மும்பையிலிருந்து இந்த கும்பலுடன் சென்னைக்கு வந்தவர்கள் ஆவர். அவர்களின் பெற்றோர்களுக்கு போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications