நாடு முழுவதும் வேலைக்கு ஆளெடுப்பது அதிகரிப்பு

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கும் காலாண்டின் தொடக்கத்தில் 6 சதவீதமாக மட்டுமே இருந்த ஆளெடுப்பு நடவடிக்கைகள், இந்த ஜூலை மாதம் 64 சதவீதமாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
டீம்லீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில், ஆளெடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான இன்டெக்ஸ் புள்ளிகள் 5லிருந்து 61 ஆக உயர்ந்துள்ளது. கடந்த நான்கு காலாண்டுகளில் இது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்களில் நடத்தப்படும் ஆய்வின் அடிப்படையில் ஆளெடுப்பு குறித்த அறிக்கையை ஒவ்வொரு காலாண்டு இறுதியிலும் டீம் லீஸ் வெளியிடுகிறது.
தற்போதைய ஆய்வின்போது நாடு முழுவதும் 568 நிறுவனங்கள் கணக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. வேலைவாய்ப்பு அதிகரிப்பு, வேலைக்கு ஆளெடுக்கும் நடைமுறைகள் உள்ளிட்டவை அதில் கணக்கெடுத்துக் கொள்ளப்படும்.
நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பு நிலவரம் குறித்து இது உதவுகிறது.
டெல்லி, மும்பை, அகமதாபாத் நகரங்களில் கடந்த காலாண்டை விட இந்த காலாண்டில் ஆளெடுப்பு விகதம் நல்ல உயர்வைக் கண்டுள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு காலாண்டில் கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலும் ஆளெடுப்பு நடந்து வருகிறதாம். அதேசமயம், ஹெல்த்கேர், பார்மசூட்டிகல்ஸ் ஆகிய துறைகளில் சற்று தேக்க நிலை காணப்படுகிறது.
கட்டமைப்புப் பணித் துறை, உற்பத்தி, தயாரிப்புத் துறை, டெலிகாம் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.
நாட்டின் 2ம் நிலை நகரங்களில்தான் ஆளெடுப்பு அதீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. பெருநகரங்களை விட 2ம் நிலை நகரங்களை நிறுவனங்கள் அதிகம் விரும்புவதே இதற்கு முக்கியக் காரணம்.
-
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி












Click it and Unblock the Notifications