பள்ளி கட்டணம் குறையவே இல்லையே: பெற்றோர்கள் கவலை
சென்னை: அதிக கல்விக்கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே என்று பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதால், தமிழக அரசு நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து கல்வி கட்டணத்தை நிர்ணயித்தது. அந்த குழு தமிழகமெங்கும் பள்ளிகளை ஆய்வு செய்து, ஆய்வின் அடிப்படையில் குறிப்பிட்ட கல்வி கட்டண விகிதத்தை நிர்ணயம் செய்தது. இதற்கு பெற்றோர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது.
அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி அறிவித்திருந்தது.
ஆனால், ஏராளமான தனியார் பள்ளிகளில் அதிக கல்விக்கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் புகார் கொடுத்த பெற்றோர்களும், மாணவர்களும்ம் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையில், அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி 5,500-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மேல்முறையீடு செய்துள்ளன. இதையடுத்து நீதிபதி கோவிந்தராஜன் குழு தனியார் பள்ளிகளில் மீண்டும் ஆய்வு செய்து புதிய கல்வி கட்டணத்தை நிர்ணயக்கும் என்று அரசு அறிவித்திருந்தது.
அப்படி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் புதிய கட்டணம் பற்றி எந்த தகவலும் இல்லை. ஒவ்வொரு பள்ளிக்கும் நிர்ணயிக்கப்படும் கட்டண பட்டியலை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்பது பெற்றோர்கள் எதிர்பார்ப்பு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications