போயஸ் கார்டனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அதிமுகவினர்
சென்னை: அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் செயலாளர் டாக்டர் வெங்கடேஷின் ஆதரவாளர்கள் இன்று கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு முன் முற்றுகையிட்டு போராட்டடும் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியச் செயலாளராக இருந்தவர் தங்க பட்சாட்சரம். இவர் டாக்டர் வெங்கடேஷின் ஆதரவாளராம்.
சமீபத்தில் தங்க பஞ்சாட்சரம் ஒன்றியச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதில் அண்ணாமலை என்பவர் நியமிக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்க பஞ்சாட்சரம் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் இன்று போயஸ் கார்டன் முன் திரண்டு முற்றுகையிட்டு திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டாக்டர் மைத்ரேயன், மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் கட்சித் தலைமைக்கு தவறான புகார் தந்து தன்னை பதவியிலிருந்து நீக்கிவிட்டதாக பஞ்சாட்சரம் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆர்ப்பாட்டத்தின்போது மைத்ரேயன், சோமசுந்தரத்துக்கு எதிராக பஞ்சாட்சரத்தின் ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
இதையடுத்து ஜெயலலிதாவின் உதவியாளர் பஞ்சாட்சரத்தையும், முக்கிய நிர்வாகிகளையும் அழைத்துப் பேசினார்.
அவர்கள் சொன்ன குறைகளைக் கேட்ட அவர் ஜெயலலிதாவிடம் அதை எடுத்துச் செல்வதாகக் கூறி அவர்களை கலைந்து போகச் சொன்னார்.
இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
சசிகலாவின் உறவினரான வெங்டஷிடம் இருந்து 3 மாவட்டப் பொறுப்பாளர் பதவிகளை ஜெயலலிதா சமீபத்தில் பறித்தது குறிப்பிடத்தக்கது. அவரது இளம்பெண்கள்-இளைஞர்கள் பாசறைச் செயலாளர் பதவியும் விரைவில் பறிபோகலாம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications