கூட்டுறவு சங்க நகை கொள்ளையை கண்டித்து உளுந்தூர்பேட்டையில் அதிமுக போராட்டம்-ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூட்டுறவு சங்கத்தில் நகைகள் கொள்ளைடிக்கப்பட்டதைக் கண்டித்து உளுந்தூர்பேட்டையில் அதிமுக சார்பி் போராட்டம் நடத்தப்படும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம், திருநாவலூர் உழவர் பணி கூட்டுறவு சங்கத்தில், திருநாவலூர் பகுதியைச் சுற்றியுள்ள 25 கிராமங்களைச் சேர்ந்த சுமார் நான்காயிரம் ஏழை, எளிய விவசாயிகள் அங்கத்தினர்களாக உள்ளனர். மேற்படி கூட்டுறவு சங்கத்தில் நகைகளை அடகு வைத்து விவசாயம் செய்வது இப்பகுதி மக்களின் வாடிக்கை. இந்தச்சங்கத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள ஏழை, எளிய விவசாயிகளின் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

கொள்ளையர்களை காவல்துறை இது நாள் வரையிலும் கண்டு பிடிக்கவில்லை. இந்தக் கொள்ளைக்குக்காரணமான கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதே போன்று, திருநாவலூர் தொகுதிக்கு உட்பட்ட தென் பெண்ணையாற்றில் வரம்பு மீறி மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. இதன் விளைவாக, நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து 10,000 ஏக்கர் விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொது மக்கள் முறையிட்டும், இதைத்தடுத்து நிறுத்த மைனாரிட்டி திமுக அரசு எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

உளுந்தூர்பேட்டை அரசு பொதுமருத்துவமனை இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளுக்கு மத்தியில் இருக்கிறது. இந்தப்பகுதியில் சாலை விபத்து ஏற்பட்டு, உயிருக்குப் போராடும் நிலையில் ஏழை, எளிய மக்கள் மேற்படி அரசு மருத்துவமனையை நாடிச் செல்லும் போது, அவசர சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான உபகரணங்கள் கூட இல்லாத சூழ்நிலை அங்கு நிலவுகிறது.
இதன் காரணமாக, மேல் சிகிச்சைக்காக பொதுமக்கள் பாண்டிச்சேரிக்கும், விழுப்புரத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் போது, செல்லும் வழியிலேயே உயிரிழப்புகள் ஏற்படுவதாக புகார்கள் வருகின்றன.

உளுந்தூர்பேட்டை அரசு பொதுமருத்துவமனையில் அனைத்து அவசர சிகிச்சைகளுக்கும் தேவையான வசதிகளை செய்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பொதுமக்கள் வலியுறுத்தியும், இதுநாள் வரை எந்தவிதமான நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை.

இதைக் கண்டித்து விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் நாளை உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

'மாடுகள்'-பழ.கருப்பையா தலைமையில் ஆர்ப்பாட்டம்:

இந் நிலையில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் அதிமுக இலக்கிய அணித் தலைவர் பழ.கருப்பையா தலைமை யில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குழந்தை கடத்தல், விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஒன்றியம், நெடிமோழியனூர் கிராமத்தில் நான்கு மாதங்களாக, வீடுகள் திடீர் திடீர் என தீப்பற்றி எரிந்து வருவது, நின்று கொண்டிருக்கும் ஆடு, மாடுகள் தீப்பிடித்து எரிவது, மயிலம் ஒன்றியம், சித்தணி கிராமத்தில் ரயில் தண்டவாளம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது ஆகியவற்றை கண்டித்தும்,

இந்த விவகாரங்களில் உண்மைக் குற்றவாளிகளை போலீஸார் இதுவரை கைது செய்யாததைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+