நாளை ஆந்திர இடைத் தேர்தல்-தெலுங்கானா கட்சிகள் பலத்தை நிரூபிக்குமா?

Subscribe to Oneindia Tamil

Telangana
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் நாளை சட்டசபை இடைத் தேர்தல் நடைபெறுகிறது. தெலுங்கானா பகுதியி்ல் நடைபெறும் இடைத்தேர்தல் என்பதால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தனது பலத்தை நிரூபிக்க ஆவலுடன் உள்ளது.

தெலுங்கானா போராட்டம் சில மாதங்களுக்கு முன்பு உச்சமடைந்திருந்தபோது அப்பகுதியைச் சேர்ந்த 12 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர்.இந்தத் தொகுதிகளுக்கு தற்போது இடைத் தேர்தல் நடைபெறுகிறது. நாளை இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

இதில் தெலுங்கு தேசம் கட்சிக்கும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கும் இடையில்தான் கடும் மோதல் நிலவுகிறது.

மின்னணு வாக்குப் பதிவை தடுப்பதற்காக ஏராளமான சுயேச்சைகளை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி களம் இறக்கியதால், ஐந்து தொகுதிகளில் வாக்குச் சீட்டு முறைப்படி தேர்தல் நடைபெறவுள்ளது. மற்ற தொகுதிகளில் மின்னணு முறைப்படி வாக்குப்பதிவு நடைபெறும்.

தற்போதைய நிலவரப்படி தெலுங்கு தேசம் கட்சியே பெரும்பாலான தொகுதிகளில் வெல்லும் என பல்வேறு கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன. இருப்பினும் இதைத் தாண்டி வென்று தனது பலத்தை நிரூபிக்க தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி வேகத்துடன் உள்ளது.

நாளைய வாக்குப் பதிவுக்குப் பின்னர் 30ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+