கக்கன், காமராஜருக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார் ஜெ.-ஆற்காடு வீராசாமி
சென்னை: கட்சியை முறையாக நடத்த முடியாத ஜெயலலிதா, காமராஜருக்கும், கக்கனுக்கும் மரியாதை கொடுக்க முன்வருவது ஏமாற்றுவேலை. நீலிக்கண்ணீர் வடிக்கிறார் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் அமைச்சர் ஆற்காடு வீராசாமி
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை கடற்கரை சாலையில் இருந்த கற்புக்கரசி கண்ணகி சிலை, அகற்றியதைப் பற்றி கவலைப்படாத ஜெயலலிதா, இப்போது காமராஜருக்கும், கக்கனுக்கும் சிலை வைக்க வேண்டும் என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.
சினிமாவில் தான் பலவேடங்களை போடமுடியும். அரசியலில் நாளுக்கு ஒரு வேடம் போட்டால், மக்கள் ரசிக்க மாட்டார்கள். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தனது தமிழ் இனப்பகையை வெளிப்படுத்திய ஜெயலலிதா, தற்போது இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.
காமராஜருக்கு முதன் முதலில் சிலை வைத்தது திமுகதான். கன்னியாகுமரி கடற்கரையில் காமராஜருக்கு நினைவு மண்டபம் அமைத்து அழகு பார்த்தவர் முதல்வர் கருணாநிதி. தியாகி கக்கனுக்கு தும்பைப்பட்டியில் விழா நடத்தியது திமுக ஆட்சியில்தான்.
கட்சியை முறையாக நடத்த முடியாத ஜெயலலிதா, காமராஜருக்கும், கக்கனுக்கும் மரியாதை கொடுக்க முன்வருவது ஏமாற்றுவேலை என்று தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications