வரும் 31ம் தேதி முதல் சென்னையில் சுத்திகரிக்கப்பட்ட கடல் குடிநீர் வினியோகம்!

சென்னை நகரின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் சென்னையை அடுத்த மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ரூ.400 கோடி செலவில் ஐ.வி.சி.ஆர்.எஸ். நிறுவனமும் ஜெர்மன் நாட்டு பெப்சோ நிறுவனமும் இணைந்து இதற்கான ஆலையை அமைத்துள்ளன.
இங்கு, கடல் நீரில் இருந்து தினமும் 100 மில்லியன் லிட்டர் குடிநீர் தயாரித்து சென்னை நகருக்கு வினியோகிக்கப்படவுள்ளது.
இதன் கட்டுமான பணி 2007ம் ஆண்டு தொடங்கியது. இந்தப் பணிகள் முடிவடைந்ததையடுத்து அதன் சோதனை ஓட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது.
ஆலை அமைந்துள்ள காட்டுப்பள்ளியில் இருந்து சென்னைக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொண்டு வர குடிநீர் வாரியம் மூலம் 35 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரமாண்ட குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இந்த நீரை தேக்கி வைக்க செங்குன்றம், மாதவரம் ஆகிய இடங்களில் பிரமாண்டமான மேல் நிலைத் நீர்த் தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் இந்த குடிநீர் வினியோகத் திட்டம் வரும் 31ம் தேதி முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்படவுள்ளது.
சென்னை நகருக்கு இப்போது பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகளில் இருந்தும், ஆந்திராவின் கிருஷ்ணா நதி நீரும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இப்போது கடல் குடிநீரும் சப்ளையாகவுள்ளதால் ன்னையில் குடிநீர் தட்டுப்பாடு பெருமளவு குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
40 வருடத்துக்கு பின் 750 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு:
இந் நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கோட்டூர்புரம் பாரதி அவென்யூ, மாந்தோப்பு காலனி பகுதியைச் சேர்ந்த 750 குடும்பத்தினருக்க 40 ஆண்டுகளுக்குப் பின் இப்போது குடிநீர் இணைப்பு தகப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் குடியிருப்புகள் உருவாகி 40 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. ஆனால் இதுவரை குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந் நிலையில் தற்போது மாநகராட்சி சார்பில் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
ரூ.34 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கழிவு நீரோற்று நிலையத்தை மேயர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications