ஜெ.வுக்கு எதிரான போராட்டம்-ஸ்டாலின் தலைமையில் திமுக தீவிர ஆலோசனை
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக ஆளும் கட்சியான திமுகவின் இளைஞர் அணி சார்பில் நடத்தப்படவுள்ள போராட்டம் குறித்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலி்ன் தலைமையில் தீவிர ஆலோசனை நடைபெறுகிறது.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் இன்று (28.07.2010 புதன்கிழமை) மாலை 5 மணிக்கு சென்னை திமுக இளைஞர் அணி அலுவலகம், அன்பகம் அண்ணா மன்றத்தில் இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் மேயர் சுப்பிரமணியன், இ.ஜி.சுகவனம் எம்.பி., சேலம் ராஜேந்திரன் எம்எல்ஏ, சுப.த. சம்பத், சுபா.சந்திரசேகர், அசன்முகமது ஜின்னா ஆகியோர் முன்னிலையில் நடைபெறும்.
அப்போது மாநகர, மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தக் கூட்டத்தின்போது போராட்டத்தை எப்படி நடத்துவது என்பது உள்ளிட்டவை குறித்து தீவிரமாக ஆலோசிக்கவுள்ளனராம்.


Click it and Unblock the Notifications
