'புர்ஹா': கட்டாயப்படு்த்தும் மாணவர்கள்-ஆசிரியை விலகல்!

கொல்கத்தா ஆலியா இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம், தங்களது ஆசிரியைகள் கட்டாயம் புர்ஹா அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதால் 7 ஆசிரியைகள் அதை அணிய ஆரம்பித்துள்ளனர்.
ஆனால், ஷீரின் மத்யா என்ற 24 வயது இலக்கிய ஆசிரியை புர்ஹா அணிய மறுத்துவிட்டார். மேலும் தனது பதவியை விட்டு விலகிவிட்ட அவர் அந்தப் பல்கலைக்கழகத்தின் இன்னொரு கேம்சில் பணிக்குச் சேர்ந்துள்ளார்.
இது குறித்து ஷீரின் கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதம் மாணவர்கள் சங்கத்தினர் 8 ஆசிரியைகளை அழைத்து புர்ஹா அணிந்து தான் பல்கலைக்கழகத்துக்குள் வர வேண்டும் என்று உத்தரவு போட்டனர். இது குறித்து ஆலோசனைகள் எல்லாம் தேவையில்லை என்றும் சொல்வதை மட்டும் கேட்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வேலையை விட்டுவிட வேண்டும் என்றும் கூறினர்.
யாராவது புர்ஹா அணிய விரும்பினால் அது சரி தான். ஆனால் அதை எப்படி அடுத்தவர் மீது கட்டாயப்படுத்த முடியும்?. நான் விரும்பினால் அதை நிச்சயம் அணிவேன். இவர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள் என்பதற்காக அதை என்னால் அணிய முடியாது என்றார்.
இது குறித்து மாணவர்கள் சங்க பொதுச் செயலாளர் முகம்மத் அதிகுர் ரஹ்மான் கூறுகையில், இந்தப் பல்கலைக்கழகம் மதரஸாவில் அமைந்துள்ளது. இந்த வளாகமே மதரஸா தான். இங்கு பெண்கள் புர்ஹா அணிவது அவசியம் என்றனர்.
இது குறித்து மேற்கு வங்க சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அப்துஸ் சத்தார் கூறுகையி்ல், இது மிகவும் சீரியசான விஷயம். ஒரு தனி மனித உரிமையைப் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை. ஆசிரியைகளை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications