கள்ள நோட்டு கும்பலை வளைக்க நள்ளிரவில் அதிரடி:8 பேர் கைது
நெல்லை: கன்னியாகுமரியில் கள்ள நோட்டுக் கும்பலைச் சேர்ந்த 8 பேர் சிக்கினர்.
தமிழகத்தில் கள்ளநோட்டு கும்பலை கூண்டோடு வலைப்பதற்கான பணியை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. கியூ பிரிவு போலீசார் மாநிலம் முழுவதும் நேற்றிரவு அதிரடி சோதனை நடத்தியதில் கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த பலர் சிக்கியுள்ளனர். இந்த சோதனையில் 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 7 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளது. இந்திய பொருளாதாரத்தை ஆட்டி படைக்கும் கள்ளநோட்டு புழக்கத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் இதை முழுமையாக தடுக்க முடியவில்லை.
கேரளாவில் இருந்து தமிழகம் வரும் ஒரு கும்பல் மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களி்ன் முக்கிய நகரங்களில் அறை எடுத்து தங்கி கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுகின்றனர்.
கேரளாவில் இருந்து கள்ள நோட்டுகளை வாங்கி புழக்கத்தில் விடுபவர்களை பிடிப்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் கியூ பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் ஜார்க்கண்ட் மாநிலம் பிலாஸ்பூர் பகுதியை சேர்ந்த முகமது மத்தேயு, உபைதூர் சேக், நசீர் ஷேக், முபாரக் சேக், முகமது சபிக்குல் சேக், முகமது அஸ்ரபுல், முகமது முஸ்தபா, முஜிபூர் சேக் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் போலீசார் நேற்றிரவு முதல் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து ரூ. 6 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications