காமன்வெல்த் போட்டிக்கு ரூ. 100 கோடி நன்கொடை தர பிசிசிஐ மறுப்பு
மும்பை: டெல்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளுக்கு ரூ. 100 கோடி நன்கொடை தருமாறு கேட்டிருந்த காமன்வெல்த் போட்டி குழுவின் கோரிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியம் நிராகரித்து விட்டது.
காமன்வெல்த் போட்டிகளுக்கான முன்னணி பங்குதாரராக இருக்குமாறும், ரூ. 100 கோடியை நன்கொடையாக தருமாறும் காமன்வெல்த் போட்டிக்கான ஒருங்கிணைப்புக் குழு கிரிக்கெட் வாரியத்திற்குக் கோரிக்கை விடுத்திருந்தது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிலைக்குழு இன்று கூடி ஆலோசித்தது. பின்னர் இந்தக் கோரிக்கையை நிராகரிக்க முடிவு செய்தது.
இதுகுறித்து கிரிக்கெட் வாரிய செயலாளர் சீனிவாசன் கூறுகையில், அக்டோபர் 3ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறும் காமன்வெல்த் போட்டிக்கு ரூ. 100 கோடி நன்கொடை வழங்குமாறு போட்டிக் குழு கோரிக்கை விடுத்திருந்தது.
இதை ஏற்க இயலாத நிலையில் இருப்பதாக நிலைக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அதேபோல ஐசிசியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத் தலைவர் ஆலன் ஐசக்குக்கு ஆதரவு அளிப்பது எனவும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என்றார்.
காமன்வெல்த் போட்டி ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி சிதைந்து கொண்டிருக்கிறது. கட்டுமானத்தில் ஏற்பட்ட மிகப் பெரும் தாமதம், நிதி முறைகேடு என சர்ச்சைகள் தொடர்ந்து வரும் நிலையில் தற்போது ரூ. 100 கோடி நன்கொடை தர முடியாது என கிரிக்கெட் வாரியம் மூஞ்சியில் அடித்தது போல கூறி விட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications