தென்னகம் முழுவதும் இன்று நள்ளிரவு முதல் லாரிகள் ஓடாது

இதனால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் லாரிப் போக்குவரத்து முற்றிலும் முடங்கவுள்ளது. இதனால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும், பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து எந்த லாரியும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற அறிவிப்பை கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநில லாரி உரிமையாளர் சங்கங்களும் அறிவித்துள்ளன.
லாரிகள் வேலைநிறுத்தத்தால் காய்கறி உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டு விலை உயரும் அபாயம் எழுந்துள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட லாரிகள் நாளை முற்றிலும் வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மக்கள் காய்கறி விலை உயர்வை சந்திக்க நேரிடும்.
ஏற்கனவே விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வரும் நிலையி லாரி ஸ்டிரைக்கால் பெரும் பாதிப்பை மக்கள் சந்திக்க நேரிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications