மின் கட்டண உயர்வு இல்லை என்று கூறுவது ஏமாற்றும் செயல்-வைகோ

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தின் மின்சாரத் தேவை 11 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தபோதிலும், தமிழக அரசின் அலட்சியத்தால் கடந்த நான்கு ஆண்டு காலமாக மின் உற்பத்தி 8 ஆயிரம் மெகாவாட்டாக குறைந்துவிட்டது.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும் பன்னாட்டு நிறுவன தொழிற்சாலைகளுக்கும் 700 மெகாவாட் மின்சாரத்தை தடையின்றி 24 மணி நேரமும் வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த திமுக அரசு மின்வெட்டு காரணமாக தமிழக மக்கள் அல்லல்படுவதை புரிந்துகொண்டதாக தெரியவில்லை.
வீடுகளில், இருமாதங்களுக்கு 600 யூனி்ட் வரை மின்சாரம் உபயோகிப்பதற்கு கட்டண உயர்வு இல்லை என்று அறிவித்துள்ளது மக்களை ஏமாற்றும் செயல்.
ஏற்கெனவே மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளுக்கு இந்த கட்டண உயர்வு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
குடிசைத் தொழில் செய்வோர், வணிக நிறுவனங்கள், கல்வி நி்லையங்கள் ஆகியவற்றுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணம் மறைமுகமாக மக்கள் மீது தான் சுமத்தப்படும்.
எனவே, எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத மின்கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெறவும், மின்வெட்டு இல்லாமல் சீரான மின் விநியோகத்திற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications