தென் மாவட்ட ரயில்களின் நேரம் இன்று முதல் மாற்றம்
சென்னை: சென்னையில் இருந்து புறப்படும் முக்கிய ரயில்களின் நேரம் இன்று முதல் மாற்றப்படுகிறது.
தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணையின்படி சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் 4 முக்கிய விரைவு ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர்- செங்கோட்டை, பொதிகை விரைவு ரயில் (2661) இரவு 8.05 மணி.
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, நெல்லை விரைவு ரயில் (2631) இரவு 8.50 மணி.
சென்னை எழும்பூர் - மதுரை, பாண்டியன் விரைவு ரயில் (2637) இரவு 9.15 மணி.
சென்னை எழும்பூர்- ராமேசுவரம், பாண்டியன் விரைவு ரயில் (6701) இரவு 9.40 மணி.
ராமேசுவரம்- வாராணசி விரைவு ரயில் (4259) சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 1.10 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும். (இது நடைமுறைக்கும் வரும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்).
இதேபோல மறுமார்க்கத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்து சேரும் 9 முக்கிய விரைவு ரயில்களின் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் விவரம்:
திருச்செந்தூர்- எழும்பூர் விரைவு ரயில் (6736)- தினமும் காலை 10.50 மணிக்கு எழும்பூருக்கு வந்து சேரும்.
ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் மங்களூர் சென்னை விரைவு ரயில் (6108) காலை 5.10 மணிக்கும், கும்பகோணம்- திருச்சி- எழும்பூர் மலைக்கோட்டை விரைவு ரயில் (6178) காலை 5.30-க்கும், திருநெல்வேலி- சென்னை எழும்பூர் விரைவு ரயில் (2632) காலை 6.35-க்கும் எழும்பூர் வந்து சேரும்.
ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் மதுரை- சென்னை எழும்பூர் விரைவு ரயில்-2794 (வாரம் இரு முறை) எழும்பூருக்கு காலை 7.20 மணிக்கு வந்து சேரும்.
புதுச்சேரி- சென்னை விரைவு ரயில் (6116) காலை 9.20-க்கும், வாராணசி- ராமேசுவரம் விரைவு ரயில் (4260) காலை 10.35-க்கும் வந்து சேரும்.
ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் நாகர்கோவில்- சென்னை எழும்பூர் விரைவு ரயில் (2668) தினமும் காலை 6 மணிக்கு எழும்பூருக்கு வந்து சேரும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications